பிரிஞ்சி சாப்பாடு செய்ய பிளாஸ்டிக் அரிசி பயன்படுகிறதா? - தமிழக அரசு விளக்கம்.!!
tamilnadu government explain plastic rice use biriyani
சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பெரிய பெரிய நகரங்களில் கணவன், மனைவி என 2 பேரும் வேலைக்கு செல்கின்றனர். அப்படி செல்பவர்களுக்கு பிள்ளைகளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.
ஆனால், அவர்களுக்கு சமையல் செய்து கொடுக்க முடியாத நிலை உள்ளது. இந்த நேரத்தில்
பலரும் தெரு கடையில் விற்பனை செய்யப்பட்டு வரும் 'பிரிஞ்சி' சத்தத்தை வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த சாப்பாடு குறைந்த விலையில் வயிறு நிறையும் அளவிற்கு இருப்பதால் பொதுமக்கள் பிரிஞ்சி சாப்பாட்டை தேர்வு செய்கின்றனர்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் 30 ரூபாய் பிரியாணி சமைப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, "இது முற்றிலும் பொய்யான தகவல். சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் இருப்பது பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் காட்சியல்ல. பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வதந்தி பரப்பி வருகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tamilnadu government explain plastic rice use biriyani