6 நாள் சுற்றுப்பயணமாக செர்பியா, சூரினாமுக்கு சென்றார் குடியரசு தலைவர் முர்மு..! - Seithipunal
Seithipunal


ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று முதல் 9-ம் தேதி வரை ஆறு நாட்கள் சூரினாம் மற்றும் செர்பியாவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, அமைச்சர் மற்றும் மக்களவை உறுப்பினர் ரமா தேவி ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணத்தின் மூலம் 2 நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் வர்த்தக ரீதியான உறவுகள் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரினாம் ஜனாதிபதி சான் சந்தோகியின் அழைப்பின் பேரில் பயணத்தின் முதல் கட்டமாக இன்று முதல் 6ஆம் தேதி வரை இந்திய ஜனாதிபதி சூரினாமில் இருப்பார். அங்கு இந்தியர்கள் வருகையை சிறப்புமிக்கும் விதமாக 150வது சிறப்பு ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து அவர் ஜூன் 7 முதல் 9 வரை ஐரோப்பிய நாடான செர்பியாவுக்குச் செல்கிறார்.

இதையடுத்து செர்பியா பிரதமரை சந்தித்து வர்த்தக தூதரக உறவுகளை மேம்படுத்த ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். மேலும் இந்திய ஜனாதிபதி பதவியேற்று முதல் முறையாக சூரினாம் மற்றும் செர்பியா நாடுகளுக்கு செல்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President murmu 6 days visit to Suriname and serbia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->