மத்திய அமைச்சர்கள் கூட்டம் - மோடிக்கு எந்த இலாகா தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு ஆட்சியமைக்க ஜனாதிபதியிடம் உரிமை கோரப்பட்டது. 

இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். 

அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். இதற்கிடையே பா.ஜ.க. அரசில் பதவியேற்ற மத்திய அமைச்சர்களில் யாருக்கு எந்த இலாகா ஒதுக்கப்படும் என்பதில் பரபரப்பு நீடித்து வந்தது. 

இந்த நிலையில், அந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அமித்ஷா, ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் ஏற்கெனவே வகித்த துறையை மீண்டும் ஏற்றுள்ளனர். சிலருக்கு இலாகா மாற்றப்பட்டு புதிய இலாகா வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய பணியாளர் நலன், அணுசக்தி துறை, விண்வெளி துறை உள்ளிட்ட துறைகளை மீண்டும் தன்வசமே வைத்துக் கொண்டார். மேலும், முக்கிய கொள்கை விவகாரம் மற்றும் ஒதுக்கப்படாத துறைகளை பிரதமர் மோடியே கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi departments


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->