கொரோனா எதிரொலி : பள்ளிகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு விரைவில்...
Puducherry CORONA 3RD WAVE ISSUE
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளை மூடுவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் தற்போது தீவிரமடைந்து உள்ளது. மேலும் இந்தியாவில் இது கொரோனா மூன்றாவது அலைக்கன அறிகுறி என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளை மூடுவதற்கு உண்டான உத்தரவுகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொருத்தவரை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் வருகின்ற 10ஆம் தேதி வரை மூடப்படுகிறது.
மேலும் திரையரங்குகள், உணவகங்கள் வணிக வளாகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி என்ற உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளை மூடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
English Summary
Puducherry CORONA 3RD WAVE ISSUE