நாட்டு நல பணி திட்டத்தின் சார்பில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்! - Seithipunal
Seithipunal


 

நாட்டு நல பணி திட்டத்தின் சார்பில் புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் இயற்கை சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த பணியில் ஆறாவது வாரமாக சாரம் ஞானபிரகாசம் நகர் எஸ்.ஆர்.எஸ் குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 50 மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட தூய்மை பணியினை மேற்கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியை புதுவை மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச்செயலாளர் வழி நடத்தினார். 

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக குளம் காப்போம் குழுவின் தலைவர் கலந்துகொண்டு, மாணவர்களை ஊக்கப்படுத்தினார். 

பள்ளியின் நாட்டு நலத்திட்ட அலுவலர் விரிவுரையாளர் இந்த நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry NSS students cleaning work


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->