புதுச்சேரி | தொழிலாளிக்கு எமனாக மாறிய மது பழக்கம்! தவிக்கும் குடும்பத்தினர்!
Puducherry worker habit alcohol committed suicide
புதுச்சேரி, பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 41) இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜெய்பிரகாஷ் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்களை அமர்த்தும் தொழில் செய்து வந்தார்.
ஜெயபிரகாஷ் கடந்த 2 ஆண்டுகளாக மதுபழகத்திற்கு அடிமையாகி வந்த நிலையில் தொழிலை சரியாக கவனிக்க முடியவில்லை.
இதனால் குடும்பம் நடத்துவதற்கான போதிய வருமானம் இல்லாததால் பிரியா கணவரின் அண்ணன் நடத்தும் உணவகத்தில் பணியாற்றி வருகிறார்.
ஜெயபிரகாஷுக்கு கடந்த 3 மாதங்களாக மதுவை மறப்பதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக மீண்டும் மது அருந்துவதற்கு தொடங்கினார். இதனை அவரது மனைவி பிரியா பலமுறை கண்டித்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று காலை பிரியா ஹோட்டலுக்கு வேலைக்காக சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது கணவர் வீட்டில் இல்லாததை பார்த்த பிரியா உடனடியாக வீட்டு மாடிக்கு சென்று பார்த்தார்.
அப்போது ஜெயப்பிரகாஷ் அங்குள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக பிரியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுபழகத்தை மறக்க முடியாததால் வேதனை அடைந்து ஜெயபிரகாஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Puducherry worker habit alcohol committed suicide