திடீரென வருகை தந்த ராகுல் காந்தி!!! தாராவி குடிசை மக்கள் மகிழ்ச்சி...!
Rahul Gandhis surprise visit Dharavi slum residents are happy
அதானி நிறுவனம், மகாராஷ்டிரா அரசுடன் இணைந்து தற்போது அதிக ஏழை மக்கள் வாழும் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியை மேம்படுத்த உள்ளன. அங்கு சிறு,குறி தொழில் கூடங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழில் கூடங்களுக்குத் தாராவியிலேயே இடம் ஒதுக்கப்படுமா? அல்லது வெளிப்பகுதிக்கு இடம் மாற்றப்படுமா? என்ற ஐயம் நிலவி வருகிறது. இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று மும்பைச் சென்றுள்ளார்.

தாராவி குடிசை:
பின்னர் அவர் மதிய நேரம் 1:30 மணி அளவில் திடீரெனத் தாராவி குடிசைப் பகுதிக்கு வருகைத் தந்துள்ளார். அங்கு சந்த் ரோகிதாஸ் மற்றும் தாராவி காலகில்லா உள்ளிட்ட குடிசைப் பகுதியில் உள்ள தோல் தொழில் கூடங்கள், கடைகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். அங்கு தோல் தொழில் கூட தொழிலாளர்கள் மற்றும் கடைக்காரர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடினார். அப்போது அவர்களிடம் தாராவி மேம்பாட்டுத் திட்டத்தை குறித்து நன்மை- தீமைப் பிரச்சனைகளை குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
ராகுல் காந்தி:
சுமார் 2 மணி நேரம் உரையாடலுக்குப் பிறகு, அப்பகுதியில் திரண்டு இருந்த பொதுமக்களிடம் சில நிமிடங்கள் உரையாடிய ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ராகுல் காந்தி வருகையால் டிஜென்ஷன் முதல் காலக்கில்லா பகுதி வரைப் பலத்த பாதுகாப்பு தாராவியில் நேற்று போடப்பட்டிருந்தது. இதனால் மும்பையில் விரைவில் மாநகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியின் மும்பை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
English Summary
Rahul Gandhis surprise visit Dharavi slum residents are happy