குழந்தை ராமரை எந்த நேரத்தில் தரிசனம் செய்யலாம்? வெளியான முழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வருகிற 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு, அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. இதற்கிடையே கோயில் திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாக கோட்ட ஆணையர் கவுரவ் தயாள் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் செய்தியாளர்களிடம் பேசியாதாவது:- 

"கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவற்றிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன, கோயிலுக்குள் விழாவிற்கான இருக்கை திட்டத்தை இறுதி செய்து வருகிறோம். மொத்தம் 7500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். யார் எங்கு அமர வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டு வருகிறது. வாகனங்கள் மூலம் மைதானத்திற்குள் விஐபிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவின் போது, குழந்தை ராமர் சிலையை தற்காலிக இடத்தில் இருந்து புதிய கோயிலுக்கு பிரதமர் மோடி சுமந்து செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜனவரி 22ம் தேதி மதியம் 2 மணி வரை கோவில் வளாகத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அயோத்தி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு கோவில் கதவுகள் மூடப்படும். அன்றைய தினம் குழந்தை ராமரை யாரும் தரிசிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 20 ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு குழந்தை ராமரை தரிசனம் செய்ய சாதாரண மக்கள் மட்டுமின்றி விஐபிகளும் கூட தரிசிக்க முடியாது. ஜனவரி 22 ம் தேதி கும்பாபிஷேக நாளில் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பட்டவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, ஜனவரி 24 முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை சடங்குகள் மரபுகளின்படி நடைபெறும். ஜனவரி 23 ம் தேதி முதல் கோயில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படும். அதேசமயம், 24ஆம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் என்பதால் ஜனவரி 25ஆம் தேதி முதல் கோயில் கதவுகள் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramar temple dharisanam time


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->