ரியல் எஸ்டேட் தரகரை கன்னத்தில் அறைந்த விவகாரம்..பா.ஜ.க. எம்.பி மீது வழக்கு பதிவு!
Real estate broker slapped Case filed against BJP MP
பா.ஜ.க. எம்.பி., ரியல் எஸ்டேட் தரகரை கன்னத்தில் அறையும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்தநிலையில் ரியல் எஸ்டேட் தரகர் உபேந்திரா போலீசில் பா.ஜ.க. எம்.பி ராஜேந்தருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
பா.ஜ.க. எம்.பி. ஈதல ராஜேந்தர் என்பவரை தெலுங்கானாவின் கிரேட்டர் ஐதராபாத் நகரில் மல்காஜ்கிரி பகுதியில் வசித்து வரும் பொதுமக்களில் சிலர் நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், சிலர் அவர்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்தபா.ஜ.க. எம்.பி. ஈதல ராஜேந்தர் மல்காஜ்கிரியில் உள்ள பொச்சாரம் நகராட்சிக்குட்பட்ட ஏகாஷீலா நகர் என்ற இடத்திற்கு தொண்டர்களுடன் நேற்று சென்றார். அப்போதுஉள்ளூர் மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, அந்த தரகரிடம் பேச சென்ற எம்.பி. திடீரென ஆத்திரத்தில் தரகரின் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இதனை தொடர்ந்து, அவருடைய தொண்டர்களும் அந்நபரை கடுமையாக தாக்கினர்.எதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது, இதன்பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. எம்.பி. ஈதல ராஜேந்தர், நரப்பள்ளி மற்றும் கொர்ரேமுலா கிராமங்களில் ஏழை மக்கள் 1985-ம் ஆண்டு நிலங்களை வாங்கி வீடுகளை கட்டினர் என்றும் இன்னும் 149 ஏக்கர் பரப்பிலான பயன்படுத்தப்படாத நிலங்கள் பலமுறை திரும்ப திரும்ப விற்பனை செய்யப்பட்டு உள்ளன என குற்றம்சாட்டினார்.
மேலும் இதனால், உண்மையான உரிமையாளர்களுக்கு சொல்ல முடியாத துயரம் ஏற்பட்டு உள்ளது என கூறிய பா.ஜ.க. எம்.பி. ஈதல ராஜேந்தர் போலி ஆவணங்களை உருவாக்கி சுரண்டலில் ஈடுபட்டு உள்ள அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், ரியல் எஸ்டேட் தரகர் உபேந்திரா போலீசில் ராஜேந்தருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது . இந்தநிலையில் அவர் ரியல் எஸ்டேட் தரகரை கன்னத்தில் அறையும் காட்சிகள் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Real estate broker slapped Case filed against BJP MP