அசானி புயலால் ஆந்திராவிற்கு ரெட் அலார்ட்.. தயார் நிலையில் மீட்பு படைகள்..! - Seithipunal
Seithipunal


அசானி புயல் இன்று கரையை கடக்க வாய்ப்ப்புள்ளதால் பேரிடர் மீட்புப்படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக உருமாறியது. அதற்கு அசானி என பெர்யரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புயல் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காக்கிநாடா-விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்பதால் ஆந்திராவிற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 95 கி.மீ. வரையிலும் ஒடிசா கடலோர பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வரையிலும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திராவில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 9 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வரும் நிலையில் 7 குழுக்கள் தயார்நிலையில் வைக்கபட்டுள்ளன. அதே போல ஒடிசாவில் 17 குழுக்களும் மேற்கு வங்காளத்தில் 17 குழுக்கள்  தயார் நிலையில் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rescue forces at the ready


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->