கர்நாடகா : உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.23 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல்.!
Rs 23 crore worth gold silver seized without proper documents in Karnataka
கர்நாடகாவில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 23 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி தோ்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டு மாநில முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக போலீசார் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிக்கமகளூரு மாவட்டம் எம்.சி. ஹள்ளி பகுதியில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த ஏ.டி.எம் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் ரூபாய் 23 கோடி மதிப்பிலான 40 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஓட்டுநரிடம் விசாரித்ததில் உரிய ஆவணங்கள் இன்றி பெங்களூருவில் இருந்து சிவமொக்காவுக்கு தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொண்டு செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 40 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஏடிஎம் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Rs 23 crore worth gold silver seized without proper documents in Karnataka