திருப்பதியில் இன்று முதல் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியீடு.!
rs three hundarad online dharisana ticket released in tirupati
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் 12-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
இதனை பக்தர்கள் www.tiruptibalaji.ap.gov.in என்ற கோவில் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று திருப்பதியில் 62, 856 பேர் தரிசனம் செய்தனர். 22,115 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். அன்றைய தினம் ரூ 2.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில், தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தேவஸ்தானம் சார்பில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு ஆறு ஆயிரம் அறைகள் வாடகைக்கு விடப்பட்டு வந்தது. அதில், சேதமடைந்த அறைகள் அனைத்தும் ரூ.110 கோடி செலவில் தேவஸ்தானம் சார்பில் சீரமைக்கப்பட்டன.
மேலும், பக்தர்கள் தங்கும் காட்டேஜ் கெஸ்ட் ஹவுஸ்களில் ஏ.சி, சூடு தண்ணீர், மற்றும் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் தங்கும் அறை வாடகை மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு பக்தர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதைத் தொடர்ந்து, தெலுங்கு தேசம், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக கட்டிட அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
English Summary
rs three hundarad online dharisana ticket released in tirupati