முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் சம்பளம் 100% உயர்வு; கர்நாடக அரசு பரிந்துரை..!
salary hike for Chief Minister Ministers and MLAs Karnataka government recommends
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையத்தில் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி-க்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் சம்பளத்தை 100 சதவீதம் உயர்த்த அரசு பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பான சட்டத்திருத்த மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அத்துடன் இதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், குறித்த சம்பள உயர்வை கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா நியாயப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''முதல்வர், அமைச்சர்கள், எம்.எம்.எல்.ஏ.-க்களின் செலவினம் அதிகரித்து கொண்டே செல்கிறது. சாதாரண மனிதர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ.-க்களும் கஷ்டப்படுகிறார்கள். எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் மற்றவர்களிடம் இருந்து பரிந்துரை வந்தது. அதனால் முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளார். எல்லோரும் உயிர்வாழ வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, முதல்வர் ரூ. 75 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். இனிமேல் 1.5 லட்சம் ரூபாய் பெறுவார் என்றும், அமைச்சர்களுக்கு 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறதோடு, 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெரும், எம்.எல்.ஏ.-க்கள், எம்.எல்.சி.-க்கள், இனிமேல் 80 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள் என்றும், பென்சன் பணம், 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 95 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படஉள்ளதாகவும், விமானம் அல்லது ரெயில் டிக்கெட் அலவன்ஸ் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கவுள்ளதாகவும், இதுபோக சொந்த தொகுதிகளில் பயணம் மேற்கொள்ள 60 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மருத்துவ அலவன்ஸ், டெலிபோன் கட்டணம், தபால் கட்டணம் அலவன்ஸ் 85 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.10 லட்சமாக உயர்த்தப்படவுள்ளது. சபாநாயகர் மற்றும் சட்ட மேலவைத் தலைவர் சம்பளம் 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
salary hike for Chief Minister Ministers and MLAs Karnataka government recommends