'சனாதன தர்மம் நமது தேசிய மதம்' ..யோகி ஆதித்யநாத் புதிய விளக்கம்!  - Seithipunal
Seithipunal


சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது என்றும், சனாதன தர்மம் நமது தேசிய மதம் என்றும் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. மகா  இந்த கும்பமேளா நிகழ்ச்சியானது பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. மகா கும்பமேளாவிற்கு  இதுவரை சுமார் 11.5 கோடி பேர்வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்த நிலையில், சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது என்றும், சனாதன தர்மம் நமது தேசிய மதம் என்றும் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;-"சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என்றும்  அதுவே மனிதத்தின் மதம் என்றும்  நமது வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால் மதம் ஒன்றுதான் என்றும் அந்த மதம் சனாதன தர்மம் என்றும்  அந்த சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது என கூறினார் .

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ,ஒற்றுமையின் செய்தியை மகா கும்பமேளா கொடுக்கிறது என்றும் அங்கு பாகுபாடு காட்டப்படுவதில்லை என்றும்  சனாதன தர்மத்தை விமர்சித்தவர்கள், கும்பமேளாவை பார்க்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்த உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் திருதராஷ்டிரனைப் போல் இருக்காமல், இங்கு வந்து நேரில் பாருங்கள் என கூறினார்.

மேலும் பிரயாக்ராஜில் நடந்து வரும் மாபெரும் மத நிகழ்வான மகா கும்பமேளா, எந்த ஒரு சாதி அல்லது மதத்திற்கு உட்பட்டது அல்ல என்றும்  இது அனைத்து மதம், கலாசாரம் மற்றும் சமயங்களின் மாபெரும் கலவையாக திகழ்கிறது என இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sanatan Dharma is our national religion. Yogi Adityanaths new explanation 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->