தீவிரமடையும் நிபா வைரஸ் - பள்ளி, கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் 175 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதுடன், கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக மாநில சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:- "நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களில் 126 பேர் தீவிர பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 49 பேருக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 104 பேருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறது. 

 

மாஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பதின்மூன்று பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் வீட்டை சுற்றி 3 கி.மீ தூரத்தில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பதை பரிசோதனை செய்ய 66 குழுக்களை சுகாதாரத்துறை அமைத்துள்ளது.

நிபா வைரஸ் உடலில் நுழைந்த இரு வாரங்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்படும். தொடக்கத்தில், பாதிக்கப்பட்டவருக்கு இருமல், காய்ச்சல், தொண்டைவலி, தலைவலி, வாந்தி என்று பொதுவான அறிகுறிகள் இருக்கும். இவற்றைத் தொடர்ந்து நோயாளிக்கு சுவாசிப்பதில் சிரமம், வலிப்பு, குழப்பம், வாய் குழறுதல் உள்ளிட்ட மோசமான அறிகுறிகள் தோன்றும்" என்றுத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school and colleges close for nipah virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->