குஜராத்தில் அதிர்ச்சி - பாலியல் தொல்லை அளித்த வாலிபரை பெல்டால் வெளுத்தெடுத்த பள்ளி மாணவி.!! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம் - பாலியல் தொல்லை அளித்த வாலிபரை பெல்டால் வெளுத்தெடுத்த பள்ளி மாணவி.!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் நகரில் 19 மற்றும் 17 வயது சகோதரிகள் இரண்டு பேர் பள்ளிக்கு சென்று வந்துள்ளனர். அதில், ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, சர்காதே என்ற வாலிபர், பள்ளி மாணவியை வழிமறித்து கையை பிடித்து, பரிசு ஒன்றை கொடுக்க முயன்றுள்ளார். 

அதனை அந்த மாணவி வாங்க மறுத்துள்ளார். ஆனால், வாலிபர் அந்த பரிசு பொருளை மாணவியின் பையில் வைத்ததுடன், வலுகட்டாயமாக பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்று உள்ளார். அவரிடம் இருந்து தப்பித்து வீட்டிற்குச் சென்ற அந்த மாணவி தனது தாயாரிடம் சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த தாயார் அந்த நபருக்கு தகுந்த பாடம் கொடுக்கும்படி தனது மகள்களிடம் கூறி உள்ளார். இந்த நிலையில், வழக்கம்போல் நேற்று காலை அந்த மாணவி பள்ளிக்குச் சென்றபோது, வாலிபர் சர்காதே அவரை மீண்டும் வழிமறித்து கையை பிடித்து இழுத்துள்ளார். 

இதனை மறைந்து இருந்து பார்த்த மூத்த சகோதரி உடனே வந்து இருவரும் சேர்ந்து பெல்டால் சர்காதேவை சரமாரியாக அடித்துள்ளனர். இதையறிந்த சக மாணவிகள் மற்றும் வழிபோக்கர்களும், இந்த தகவலை தெரிந்து கொண்டு சர்காதேவை அடித்துள்ளனர். 

இதற்கிடையே அந்த மாணவிகளின் தாயார் உடனடியாக சர்காதேவுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் படி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student attack youth for sexuall harassment in gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->