எங்களுக்கு மும்மொழி கற்க உரிமையில்லையா? - பள்ளி மாணவர்கள் கேள்வி.!
school students speech about three language
மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. ஆனால், மத்திய அரசின் சிக்ஷா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ 2,152 நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.
மேலும் மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்து, தமிழக அரசு கையெழுத்திட்டால் மட்டுமே, நிதி ஒதுக்க முடியும்' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைந்தால், அது தேசிய கல்வி கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்று கூறி அதில் இணைவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் மூன்று பேர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் அந்த மாணவிகள் தெரிவித்துள்ளதாவது:- "தமிழக முதல்வருக்கு வணக்கம். அரசு பள்ளி மாணவிகளாகிய எங்களுக்கு மும்மொழி கற்க உரிமையில்லையா? ஏழை மாணவர்களாகிய எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க அனுமதி கொடுங்கள்" என்று தெரிவித்துள்ளனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
English Summary
school students speech about three language