அட பாவிங்களா!!! பட்டாசு வீசி பழிவாங்கிய பள்ளி மாணவர்கள்!!! தேர்வில் பிட் அடித்ததை தடுத்த ஆசிரியர்களின் வாகனங்கள் மீது.....?
School students took revenge throwing firecrackers teachers vehicles who prevented cheating exams
கேரளாவில் மலப்புரம் சேந்தப்புராயா பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 தேர்வு நடந்திருக்கிறது. இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு அறையில் சில மாணவர்கள் தேர்வில் காப்பியடித்து எழுத முயன்றதை கண்காணிப்பு பணியில் இருந்த தீபுகுமார் மற்றும் உன்னி கிருஷ்ணன் இருவரும் தடுத்துள்ளனர்.

அந்த ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலம் கருதி காப்பியடிக்க முயன்ற மாணவர்களை பற்றி புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஆத்திரமடைந்த மாணவர்கள்,தேர்வில் காப்பியடிப்பதை தடுத்த ஆசிரியர்களின் வாகனங்கள் மீது பட்டாசுகளை வீசினர்.
வாகனங்களின் மீது விழுந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.சத்தத்தால் அந்த பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காததால் தங்களின் வாகனங்களின் மீது பட்டாசு வீசப்பட்டிருப்பதாக அந்த ஆசிரியர்கள் பள்ளியின் முதல்வரிடம் தெரிவித்தனர்.
அவர் அதுபற்றி காவலில் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆசிரியர்களின் வாகனங்களின் மீது பட்டாசு வீசியது யார்? என்பதை கண்டு பிடிக்க அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகளை காவலர்கள் ஆய்வு செய்கின்றனர்
.விரைவில் கண்டுபிடிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.
English Summary
School students took revenge throwing firecrackers teachers vehicles who prevented cheating exams