கொளுத்தும் வெயில் - பள்ளி நேரத்தில் திடீர் மாற்றம்.!
school time change for heat in odisa
ஒடிசாவில் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி இயங்கும் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கோடை காலம் ஆரம்பமாகியுள்ளது. தற்போது முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வட மாநிலத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. அதன் படி ஒடிசா மாநிலத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

மாநிலத்தின் போலாங்கிர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 104.5 டிகிரியும், பவுத் மாவட்டத்தில் 104 டிகிரியும் வெயில் சுட்டெரித்தது.
இந்த நிலையில், வெயில் தாக்கத்தில் இருந்து பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக பள்ளி நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது, 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
English Summary
school time change for heat in odisa