ஒடிசா ரெயில் விபத்து - ஏழு ஊழியர்கள் பணியிடைநீக்கம்.!! - Seithipunal
Seithipunal


ஒடிசா ரெயில் விபத்து - ஏழு ஊழியர்கள் பணியிடைநீக்கம்.!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் கடந்த மாதம் 2-ந் தேதி தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது அடுத்தடுத்து வந்த இரண்டு ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சுமார் 293 பேர் உயிரிழந்தும், 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும் உள்ளனர். 

ஒரு நொடியில் பலரின் உயிரை பறித்த இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர், மனித தவறுகளால் இந்த விபத்து நடைபெற்றதாக அறிக்கை தாக்கல் செய்தார். 

இருப்பினும், இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. தனியாக விசாரணை நடத்தி, ரெயில்வே மூத்த பொறியாளர் அருண் குமார் மகந்தோ, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான், தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் உள்ளிட்ட மூன்று பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். 

பின்னர் அவர்கள் மூன்று போரையும் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ஏழு ரெயில்வே ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்தப் பணிநீக்கம் குறித்து தென்கிழக்கு ரெயில்வே பொது மேலாளர் அனில் குமார் மிஸ்ரா தெரிவித்ததாவது, "அதிகாரிகள் உஷாராக இருந்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். இந்த விபத்து தொடர்பாக சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட மூன்று பேர் உள்பட ஏழு ஊழியர்களை ரெயில்வே பணியிடை நீக்கம் செய்துள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven employers suspend for odisa train accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->