கோவிலில் பறிபோன உயிர்கள்! கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் பலி! பதற்றமான சூழல்! - Seithipunal
Seithipunal


பீகாரில் உள்ள பாபா சித்தேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம்  பராபர்  மலையில் பாபா சித்தேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் பீகாரின் ஜகனாபாத் மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில் வருடம் தோறும் சாவான் புனித மாதத்தில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் அதிகப்படியான பக்தர்கள் குழுவிற்கு வருகை புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்பாராத கூட்டம் கோவிலுக்கு வந்ததால்  பக்தர்களிடையே தள்ளமுள்ளு ஏற்பட்டது இதனால் காவல்துறை கத்தியால் பக்தர்களை தாக்கி ஒழுங்கு செய்தனர்.

இதனை தொடர்ந்து கூட்டநெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறியும் அங்கு வந்த போலீசார் 7 பேரின் உடல்களை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் 9 பேர்  படுகாயம் அமைந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seven people killed in a stampede at the Baba Chi Eswarar temple in Bihar early this morning


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->