அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு  விசாரணை தேவையில்லாத ஒன்று - சரத் பவார் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு  விசாரணை தேவையில்லாத ஒன்று - சரத் பவார் பரபரப்பு பேச்சு.!

கடந்த சில நாட்களாகவே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால், இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு முடங்கியது. 

இந்த நிலையில், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்ததாவது: ''ஒரு காலத்தில் அரசை குறை கூற வேண்டும் என்றால் டாடா, பிர்லா உள்ளிட்டோரை இழுப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், அந்த இடத்தில் தற்போது அம்பானியும், அதானியும் உள்ளார்கள்.

அப்படி தொழிலதிபர்கள் குறிவைக்கப்படுவதை நான் ஏற்க மாட்டேன். ஒருவர் தவறு செய்துள்ளார், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உள்ளார் என்றால் ஜனநாயக முறைப்படி நீங்கள் அவர் மீது குற்றம் சாட்டலாம். ஆனால், அதுபோன்ற எந்த காரணமும் இல்லாமல் அவர்களைத் தாக்குகிறீர்கள் என்றால், அதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 

மின் உற்பத்தித் துறையில் அதானி முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறார். அது நாட்டிற்குத் தேவையில்லையா? நாட்டின் தேவையை கருதி சிலர் பொறுப்புடன் தங்கள் கடமையை செய்வதனால், நாட்டின் வளர்ச்சிக்காக அவர்கள் அளித்து வரும் பங்களிப்பை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மத்திய அரசை குறை சொல்வதற்கு வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் என்று பல முக்கியப் பிரச்சினைகள் உள்ளது. அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் அளித்துள்ள அறிக்கை குறித்து விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் குழு அமைத்துள்ளது.

அந்தக் குழு இருக்கும் போது இந்த விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையற்றது. இந்தக் கூட்டுக் குழு விசாரணையை விட உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள விசாரணைக் குழு அதிக பயனுள்ளதாகவும், தீர்க்கமானதாகவும் இருக்கும்'' என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sharad Pawar speach into parliamentary joint committie inquiory in adani issue unnecessary


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->