மணிப்பூர் கலவர வழக்குகளை விசாரிக்க சிறப்புக் குழு நியமனம்.!
Special commitee appointed to investigate of Manipur riot cases.
மணிப்பூர் கலவர வழக்குகளை விசாரிக்க சிறப்புக் குழு நியமனம்.!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3-ந்தேதி மெய்தி இன மக்களுக்கும், பழங்குடி இனத்தினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் சுமார் 100 பேர் பலியானார்கள். அதன் பின்னர் இந்தக் கலவரம் சில நாட்கள் ஓய்ந்திருந்தது. இருப்பினும், இந்தக் கலவரம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் தலைதூக்கியது.
இந்த நிலையில், நேற்று கங்க்போக்பி மாவட்டம் சங்கைதெல் அருகே வன்முறை சம்பவம் நடந்துள்ளது. இதில், பெண் உள்பட மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த, ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர்.
இதுவரைக்கும் நடந்த மணிப்பூர் கலவரம் குறித்து ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், ஆறு வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற மணிப்பூர் மாநில அரசு சமீபத்தில் சிபாரிசு செய்தது. இதற்கிடையே மணிப்பூருக்கு சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் என்று அறிவித்தார்.
அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சகம், மணிப்பூருக்கு ரூ.101 கோடியே 75 லட்சம் நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், ஆறு வழக்குகளையும் விசாரணை செய்ய டி.ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி தலைமையிலான குழுவை சி.பி.ஐ. அமைத்துள்ளது. அந்தக் குழு, விசாரணை பொறுப்பை ஏற்றுள்ளது.
English Summary
Special commitee appointed to investigate of Manipur riot cases.