கால் சென்டரில் கத்திக்குத்து.. இளம் பெண் பலி! - Seithipunal
Seithipunal


புனேவில் கால் சென்டரில் பணிபுரியும் இளைஞர் ஒருவர்,  சக பெண் ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அப்பெண்ணை மக்கள் சூழ்ந்திருக்க அந்த நபர் கத்தியால் மீண்டும் தாக்குவது வீடியோவில் பதிவாகி உள்ளது.

புனேவில் கால் சென்டரில் பணிபுரியும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் பெயர் கிருஷ்ண கனோஜா (30). அவர் எர்வாடாவை தளமாகக் கொண்ட WNS குளோபலில் (வணிக செயல்முறை அவுட்சோர்சிங் நிறுவனம்) கணக்காளராக பணியாற்றிவருகிறார்.

இந்தநிலையில் தனது சக ஊழியரான சுபதா கோதாரே (28) தன்னிடம் பலமுறை கடன் வாங்கியதாக அவர் கூறியதாக தெரிவித்துள்ளனர் . தனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் அந்த பெண் கூறியதாக அவர் தெரிவித்தார்.பணத்தைத் திருப்பித் தருமாறு சுபதாவிடம் கேட்டபோது, தந்தையின் நிலையைக் காரணம் காட்டி பணத்தைத் திருப்பித் தர மறுத்ததாக கூறப்படுகிறது . 

இதையடுத்து கனோஜா பெண்ணின் கிராமத்திற்கு சென்று உண்மையை கண்டுபிடித்தார் இளைஞர்.அப்போது அவரது தந்தை பூரண நலமுடன் இருப்பதாகவும், எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் அறிந்தார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில், கனோஜா, சுபதாவை அவரது அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துள்ளார். அப்போதுதான் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .சுபதா பணத்தைத் திருப்பித் தர மீண்டும் மறுக்கவே, இது வாக்குவாதத்திற்கு மீண்டும் வழிவகுத்தது. இதனால் கோபமடைந்த கனோஜா அவரை சமையலறைக் கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கால் சென்டரில் பணிபுரியும் இளைஞர் ஒருவர்,  சக பெண் ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அப்பெண்ணை மக்கள் சூழ்ந்திருக்க அந்த நபர் கத்தியால் மீண்டும் தாக்குவது வீடியோவில் பதிவாகி உள்ளது.குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கனோஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stabbed in the call center Young girl killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->