வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்கள்.. இந்தியாவில் தகுதியற்றவர்கள்-மத்திய அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியில் இந்திய அரசு களமிறங்கியது. அப்போது கணக்கெடுக்கும் போது சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் உக்ரைனில் படித்து வருவது தெரியவந்தது.

இதில் பெரும்பான்மையான மாணவர்கள் மருத்துவம் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏன் இந்திய மாணவர்கள் உக்ரைன் சென்று மருத்துவ படிப்பு படிக்கவேண்டும் என்ற கேள்வி அப்போது தான் எழுந்தது. இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் அதிக கட்டணம், நீட் தேர்வு போன்ற காரணங்கள் கூறப்படுகிறது. குறைவான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதால் அங்கு ஏராளமானோர் சென்று படிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில் " வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களின் 90 சதவீதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறி விடுகிறார்கள். இந்த நேரத்தில் மாணவர்கள் மருத்துவம் படிக்க ஏன் வெளிநாடு செல்கிறார்கள் என்பது குறித்து விவாதம் நடத்த இது சரியான நேரம் அல்ல" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

study medicine abroad are unqualified in India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->