புகாரை விசாரிக்க கூறிய இளம்பெண் - காவல் ஆய்வாளர் செய்த கொடூரம்.!
sub inspector arrested for harassment in kerala
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு பண மோசடி தொடர்பாக புகார் கொடுக்க காந்திநகர் காவல் நிலையத்திற்கு சென்றார். அந்தப் புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் புகார் அளித்த அந்தப் பெண் தன்னுடைய புகார் மீது கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது புகாரை விசாரித்து வந்த காவல் ஆய்வாளர் காவல் நிலையத்தில் இல்லை. அவருக்கு பதிலாக பிஜு என்ற துணை காவல் ஆய்வாளர் அங்கு இருந்தார்.

அவரிடம் அந்த பெண் தனது புகார் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்றுக் கூறினார். இதைக்கேட்ட பிஜு, தொடர் விசாரணை நடத்த வேண்டுமானால், ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் மது பாட்டிலை வாங்கி வருமாறு தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் மதுபான கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கி வந்துக் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட பிஜு, நைசாக இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்து தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அந்த பெண் கோட்டயம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்ததைத்தொடர்ந்து அந்தப் பெண் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில், மது பாட்டில் மற்றும் ரசாயன பொடி தடவிய ரூ.25 ஆயிரம் பணத்துடன் ஓட்டல் அறைக்கு சென்றார்.
இவரது வருகைக்காக காத்திருந்த துணை காவல் ஆய்வாளர் பிஜு பெண்ணை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், துணை காவல் ஆய்வாளர் பிஜுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
English Summary
sub inspector arrested for harassment in kerala