கள்ளச்சாராய உயிரிழப்பு: நிவாரணம் மட்டும் போதாது... - தடாலடியாக பேசிய சுதாகர்ரெட்டி.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குறித்து 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 

அவர்களை பா.ஜ.கவின் தமிழ்நாடு பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசு நிர்வாகத்தின் முழுமையாக செயலிழந்துள்ளதை காட்டுகிறது. கடந்த ஆண்டுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் இதே போன்ற சம்பவம் நடைபெற்ற போது முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. 

கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு உள்துறை பொறுப்பு வகிக்கும் தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரணை செய்ய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் கேட்டுக் கொண்ட நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 

அரசு ஆதரவுடன் தமிழக முழுவதும் டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றதால் குறைந்த விலை கள்ளச்சாராயத்தை மக்கள் வாங்கி குடிப்பதால் மரணங்கள் நடந்துள்ளது. 

கள்ளச்சாராயம் மற்றும் போதை ஒழிப்புக்கு மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனை விட்டுவிட்டு அடுத்த மாநில அரசுகள் மீது பழி கூறி தப்பிக்க கூடாது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்குவது மட்டுமே போதாது. அவர்களது குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். 

கள்ளச்சாராய மரணங்களுக்கு தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வாய் திறக்கவில்லை. நீட் விவகாரத்தை அரசியலாக்கி மாணவர்களின் வாழ்க்கையை விளையாட்டாக மாற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudhakar Reddy says Liquor death relief not enough


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->