கூலிப்படையினரை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிருஷ்ணசாமி ஆவேசம்.! - Seithipunal
Seithipunal


சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜான் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அரசு பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டது. ஆகிவரது உடலுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்திறனர். 

இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பௌத்த முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி பேசியதாவது:- “பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் படுகொலை சம்பவம் வேதனைக்குரியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை முன் விரோதத்தால் நடந்ததாக காவல்துறை கூறியிருந்தாலும் கூலிப்படை காரணமாகவே அந்தக் கொலை நடந்துள்ளது. 

அண்மை காலமாக தொடர்ந்து கூலிப்படையால் கொலைகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கூலிப்படையின் வேர் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிந்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும். காவல்துறை நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. 

தமிழகத்தில் அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் தான் கூலிப்படை உருவாகும் இடங்களாக உள்ளது. கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆதரவாக அரசியல் அமைப்புகள் செயல்படுவதால் தான் பொதுமக்கள் அச்சப்படும் நிலை உருவாகி வருகிறது. கூலிப்படையினர் யாராக இருந்தாலும் அவர்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

krishnasami press meet about bsp leader amstrong murder


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->