உதயநிதிக்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, சனாதனம் பற்றி பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதியின் பேச்சுக்கு பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து அமைச்சர் உதயநிதி சார்பில், தன்மீது பதியப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது, "அமைச்சர் உதயநிதி பொதுவெளியில் பேசும்போது கவனமுடன் இருக்க வேண்டும்" என்றதுடன், விசாரணையை மே 6-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. மேலும், ரிட் மனுவில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்று வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court warned uthayanithi stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->