துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்த தமிழக ஆளுநர்..!
tamilnadu government visit deputy president jagdeep thankar
பொதுவாக மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு 30 நாட்களுக்குள் ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும். அப்படி ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். ஆளுநர் பரிந்துரைத்த மசோதாக்கள் மீது ஜனாதிபதி 90 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மசோதாக்கள் மீது முடிவு எடுக்கவில்லையென்றால் தக்க காரணங்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து சம்மந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநருக்கு பாதகமானதாகவும், மாநில அரசுகளுக்கு சாதகமானதாகவும் பார்க்கப்படுகிறது என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சனம் செய்தார். இந்த நிலையில், மூன்று நாட்கள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி சென்றார். அதன் படி அவர் இன்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.
அப்போது, மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
tamilnadu government visit deputy president jagdeep thankar