பள்ளி மாணவர்களுக்கு மது ஊற்றிக் கொடுத்த ஆசிரியர் இடைநீக்கம்.!!
teacher suspend for liquor to school students in madhya pradesh
மத்தியபிரதேசம் மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு மது ஊற்றி குடிக்க கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இயங்கும் அரசு தொடக்க பள்ளி ஒன்றில் ஆசிரியரராக பணிபுரிந்து வந்தவர் லால் நவீன் பிரதாப் சிங். மதுபோதையில் பள்ளிக்கு வந்த இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு மது ஊற்றி அதனை குடிக்க கொடுத்துள்ளார்.

இந்த கொடூர செயலை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை சம்பவம் தொடர்பாக ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
teacher suspend for liquor to school students in madhya pradesh