திடீரென வெடித்து சிதறிய ரசாயன டேங்கர்: தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்.!
Telangana factory blast 7 dead
தெலுங்கானா, ஹைதராபாத் அடுத்துள்ள சந்தப்பூர் பகுதியில் இயங்கி வந்த ரசாயன தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென ரசாயன டேங்கர் வெடித்து தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ வேகமாக மற்ற இடங்களுக்கு பரவியதால் தொழிலாளர்கள் பலரும் தீயில் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை முழுமையாக அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
Telangana factory blast 7 dead