சிறையிலேயே 10 ஆண்டுகளுக்கு மேல்... குடும்பத்தினர் அளித்த திடீர் மனுக்கள்! அரசின் அடுத்தகட்ட மூவ்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 64 இடங்களில் அபார வெற்றி பெற்று மாநிலத்தின் அடுத்த முதல்வராக ரேவந்த் ரேட்டி பதவியேற்றார்.

இதற்கிடையே தெலுங்கானாவில் உள்ள சிறைகளில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இடம் மனு அளித்தனர். 

இதனை அடுத்து மூத்த அதிகாரிகள் கைதிகளின் குடும்பத்தினர் அளித்த மனுக்களை ஆய்வு மேற்கொண்டனர். இதில் விடுதலை செய்ய தகுதியான கைதிகள் தொடர்பான விவரங்களை பட்டியலிட்டனர். 

இந்த பட்டியல் அமைச்சரவை ஒப்புதலுக்கு பின்னர் ஆளுநரிடம் அளித்து ஒப்புதல் பெறப்பட்டது.இதனைத் தொடர்ந்து தெலுங்கானா, கொல்லப்பள்ளி சிறையில் இருந்து 213 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று சிறையில் இருந்து 213 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்களின் 205 பேர் ஆயுள் தண்டனை கைதிகள் எனவும் 8 பேர் அதற்கு குறைவான தண்டனையை பெற்றவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana prisoners released issue


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->