சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிபடுகொலை! பெரும் பதற்றம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பெரம்பூரில் இன்று இரவு சுமார் 7:30 மணி அளவில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை வழிமறித்த மர்ம நபர்கள், அவரை சராசரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். 

இதனை அடுத்து அவரை மீட்டு மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். 

ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் விட்டு விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முதல் கட்ட தகவலின் படி ஆம்ஸ்ட்ராங்கை ஆறு பேர் சேர்ந்த கும்பல் வெட்டிக்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தப் படுகொலை சம்பவத்தின் பின்னணியில் முன் விரோதம் உள்ளதா? அல்லது தொழில் போட்டியா? அல்லது இது அரசியல் ரீதியான கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

தமிழகத்தில் ஏற்கனவே அரசியல் கட்சி பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்ச்சியாகி வரும் நிலையில், தற்போது ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் தமிழகத்தின் தலைநகராக இருக்கக்கூடிய சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பது, தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மீதான கேள்வியை எழுப்பி உள்ளதாக தற்போது எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனை செய்ததை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகர் சேலத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி இருந்தது. 

இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் தலைமையான தமிழக அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளதாகவும், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகிறதோ என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai BSP Leader Murder


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->