சபரிமலை வருமானம் கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.80 கோடி அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


சபரிமலையில், மகரவிளக்கு சீசனில்  ரூ.440 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.  இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.80 கோடி கூடுதல் என தெரிவித்துள்ளனர். 

சபரிமலை மண்டல பூஜைகளுக்காக  நடை கடந்த நவம்பர் 15 திறக்கப்பட்டு டிசம்பர்  26ஆம் தேதி வரை திறக்கப்பட்டது. பிறகு, மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி நடை மீண்டும் திறக்கப்பட்டது. 

கடந்த 14ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடந்து முடிந்துள்ளது. அத்துடன், கடந்த 18ஆம் தேதி மண்டல மகர விளக்கு நெய் அபிஷேகமும் நடைபெற்றது.

இந்நிலையில் மாநில தேவசம் போர்டு துறை அமைச்சர் விஎன் வசவன் இது குறித்து கூறியுள்ளார். அதாவது,  மகர விளக்கு காலத்தில் சபரிமலைக்கு கிடைத்த வருமானம் ரூ.440 கோடியாக அதிகரித்து உள்ளது. 

இது கடந்த ஆண்டை காட்டிலும் 80 கோடி ரூபாய் அதிகம் ஆகும். இக்காலகட்டத்தில் 06 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒரு நாளில் அதிகபட்சமாக 1.8 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

18 ஆம் படி வழியாக நிமிடத்திற்கு 80-90 பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டு 65 பேர் மட்டுமே சென்றனர். என்று கூறியுள்ளார். அத்துடன், கோயிலில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தேவசம் போர்டு சார்பில் கவுரவம் செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Devaswom Board has announced that the income of Sabarimala has increased by Rs 80 crore compared to last year


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->