எச்சரிக்கை... கேரளாவில் தொடர்ந்து பரவி வரும் காய்ச்சல்... பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுரை.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் பல்வேறு விதமான காய்ச்சல் தொடர்ந்து பரவி வரும் நிலையில்  மக்கள் அடுத்த சில நாட்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என  கேரளா அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல், எலிக் காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் என பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கு 11,813  பேர் பல்வேறு வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 150 பேருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது மேலும் 6 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்து வரும் நாட்களில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரளா சுகாதாரத் துறை பொதுமக்களை அறிவுறுத்தி இருக்கிறது. கொசு தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்காக அடுத்த மூன்று நாட்களை உலர் நாட்களாக பயன்படுத்த வேண்டும் எனவும்  சுகாதாரத்துறை மக்களுக்கு  அறிவுரை வழங்கி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The fever that continues to spread in Kerala Health department advice to the public


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->