20 வயது இளைஞரை கத்தியில் குத்தி கொலை செய்த கும்பல்; குற்றத்தை மறைக்க தண்டவாளத்தில் வீசிய கொடூரம்..!
The gang that stabbed the youth to death The cruelty of throwing him on the tracks to hide the crime
டெல்லி கான்ட் ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது இறந்தவரின் உடலானது சிதைந்து காணப்பட்டதோடு, அவரது உடம்பில் பல கத்திக் குத்து காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் வயது 20 இருக்கும் என மருத்துவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மார்ச் 12-ஆம் தேதி காணாமல் போனவர்கள் வழக்கை விசாரித்து வந்த ஆனந்த பர்பத் போலீசார், இறந்தவரின் புகைப்படத்தை கோரி ரெயில்வே போலீசாரிடம் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இறந்தவர் பால்ஜித் நகரை சேர்ந்த பங்கஜ் என இறந்தவரின் மைத்துனர் நவீன் அடையாளம் காட்டியுள்ளார் அத்துடன், மார்ச் 08-ஆம் தேதி முதல் பங்கஜ் காணாமல் போனதாகவும் நவீன் குறிப்பிட்டுள்ளார். நவீன் பங்கஜை தேடிய போது விபத்து நடந்த ரெயில் நிலையம் அருகே அவரது ஸ்கூட்டர் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த செய்துள்ளனர். அப்போது பங்கஜை ஒரு கும்பல் பின் தொடர்ந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த கும்பலை சேர்ந்த 04 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்களுக்கும் பங்கஜுக்கும் முன்பகை இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால் 05 பேர் சேர்ந்து, மார்ச் 08-ஆம் தேதி பிரேம் நகர் ரெயில்வே கிராசிங் அருகே பங்கஜை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர். இருப்பினும் இந்த கொலையை மறைக்க பங்கஜின் உடலை ரெயில்வே தண்டவாளத்தில் வீசியுள்ளதாக விசாரணையில் கூறியுள்ளனர்.
ஏனெனில், இது ஒரு தற்கொலை என அனைவரும் நம்புவார்கள் என எண்ணி இதனை செய்துள்ளதாகவும், இவர்கள் நினைத்தது போலவே அந்த தண்டவாளத்தில் வந்த ரெயில் உடல் மீது மோதியத்தில் உடலை துண்டாகியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய 05-வது நபர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
The gang that stabbed the youth to death The cruelty of throwing him on the tracks to hide the crime