581 கிலோ கஞ்சா எங்கே?.. எலி தின்னுடுச்சு சார்.. ஷாக்கான நீதிபதிகள்.!
The judges were shocked after eating 581 kg of ganja rat in uttar pradesh
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில வருடங்களில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சாக்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கடத்தல்காரர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில், குற்றத்தை நிரூபணம் செய்து தண்டனையை அறிவிக்க பறிமுதல் செய்த கஞ்சாவை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனால் போலீசார் கஞ்சாவின் மாதிரிகளை கோர்ட்டில் சமர்ப்பித்தனர். ஆனால், நீதிமன்றம் இதை ஏற்கமறுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவையும் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், மதுரா போலீசார் நீதிமன்றத்தில், மதுரா காவல்நிலைய ஸ்டோர் ரூம்மில் எலித்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அந்த எலிக்கள் கிலோக்கணக்கில் இருந்த கஞ்சா அனைத்தையும் சாப்பிட்டு விட்டதால் 581 கிலோ கஞ்சாவை ஆதாரமாக சமர்ப்பிக்க முடியவில்லை என்று பதில் அளித்துள்ளனர்.
இதைக்கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயின. இதைத்தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இது தொடர்பாக நடத்திய தீவிர விசாரணையில், பறிமுதல் செய்த கஞ்சாவை வேறொருவரிடத்தில் அதிக விலைக்கு விற்று விட்டு எலிகளின் மீது பழிசுமத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
English Summary
The judges were shocked after eating 581 kg of ganja rat in uttar pradesh