தொடர்கதையாகிறது... இளம் வயது மாரடைப்பு!!!
The story continues young heart attack
தெலுங்கானாவில் பள்ளிக்கு நடந்து சென்ற 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
தெலுங்கானாவில், காமரெட்டி மாவட்டம் ராமரெட்டி அடுத்துள்ள கிராமத்தில் ஸ்ரீநிதி 16 வயது நிறைந்தவர். இவர்க் காமரெட்டி தனியார்ப் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு அருகே நடந்து சென்ற பொழுது திடீரென மயங்கிக் கீழே விழுந்துள்ளார். அப்போது அருகில் உள்ளவர்கள் மாணவிக்கு முதலுதவி அளித்துள்ளனர், அதில் மாற்றம் ஏதும் நிகழாததால் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார்.

இச்சம்பவமானது அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னதாக அதே மாவட்டத்தில் அலிகரின் கிராமத்தைச் சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் மாணவி, விளையாட்டு தினப் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது, ஓட்ட பயிற்சியில் திடீரென மயங்கி மாரடைப்பால் உயிரிழந்தார். அதன் பின் அதே மாவட்டத்தில் 8 வயதுடைய மற்றொரு குழந்தை, சில நாட்களுக்கு முன்பு தோழிகளுடன் விளையாடும் போது திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார்.
இச்சம்பவங்கள் குறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் "ஆரோக்கியமான ஒருவர், ஒரு மணி நேரத்திற்குள் இறந்தால் அது திடீர் மாரடைப்பு என்று அழைக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு குழந்தை மூச்சு திணறல் மற்றும் மார்பு வலி பற்றிப் புகார் செய்தால் அவரை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக இந்தியாவில் பல மாநிலங்களில் மாரடைப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இச்சம்பவங்களானது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
The story continues young heart attack