பெரும் அதிர்ச்சி! வீட்டுப்பாடம் செய்யாத மாணவன்! கோவத்தில் கட்டையால் அடித்து பல்லை உடைத்த ஆசிரியர்! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டுப்பாடம் செய்யாததால் ஆத்திரத்தில் ஆசிரியர் மாணவரின் பல்லை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர் வீட்டு பாடங்களை செய்து விட்டீர்களா என்று கேட்டதாக கூறப்படுகிறது. அறிவியல் பாட ஆசிரியர் முகமது ஆசிப் அவ்வாறு கேட்டுள்ளார்.

வகுப்பறையில் உள்ள ஒரு சிறுவன் வீட்டு படத்தை முடிக்கவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனை கேட்டு ஆத்திரமடைந்த அறிவியல் ஆசிரியர் அச்சிறுவனை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிறுவன் மயங்கி கீழே விழுந்து சிறுவனின் வாய் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிறுவன்  சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுதொடர்பாக பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை தலைமறைவான ஆசிரியர் முகமது ஆசிப்பை தீவிரமாக தேடி வந்தனர்.

பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை தாக்கிய ஆசிரியர் முகமது ஆசிப்பை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The teacher broke the student tooth in anger because the student did not do his homework


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->