மத்திய கல்வி மந்திரி ஆணவ பேச்சு..ப.சிதம்பரம் கண்டனம்!
The Union Education Minister P. Chidambaram condemns!
தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து மத்திய மந்திரியின் ஆணவப் பேச்சுக்கு தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதையடுத்து புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மத்திய மந்திரியின் இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மத்திய மந்திரியின் இந்த கருத்துக்கு கண்டனம் பலரும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் சொன்னது ஆணவத்தின் உச்சம் என கூறியுள்ளார் .மேலும் அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது, அரசியல் சாசனம் உருவாகிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில் அரசின் உண்மை என்றும் இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா? என கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம்இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேரு அவர்களும் இந்திரா காந்தி அவர்களும் தந்த உறுதிமொழிகளையாவது அவருக்குத் தெரியுமா? வினவியுள்ளார்,
மேலும் நாடாளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா? என கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம்,தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
The Union Education Minister P. Chidambaram condemns!