மாதம் 1 லட்சம் சம்பாதிப்பவர்கள் இனி வரி கட்ட தேவையில்லை..பட்ஜெட்டில் அறிவிப்பு!
Those earning Rs 1 lakh a month will no longer have to pay tax. Budget announcement
இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.மேலும் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
8வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார்.அந்தவகையில் பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் புதிய வருமானவரி முறையில் ரூ. 12 லட்சம் வரை இனி வரி கிடையாது என்றும் கூடுதலாக ரூ. 75 ஆயிரம் கழிவும் வழங்கப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை" என்று அறிவித்தார்.

மேலும் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுவதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
English Summary
Those earning Rs 1 lakh a month will no longer have to pay tax. Budget announcement