திருப்பதி ஏழுமலையான் தரிசனம் ரத்து! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற 17ஆம் தேதி பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

பிரம்மோற்சவம் விழாவிற்கு இன்று காலை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. மூலவர் சன்னதி, கொடிமரம், கோவில் வளாகம் முழுவதும் பரிமளம் என்னும் பல்வேறு வாசனை திரவங்களை கொண்டு சுத்தப்படுத்தப்பட்டன. 

கோவிலில் காலை முதல் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றதால் காலை 6 மணி முதல் 12 மணி வரை சுமார் ஆறு மணி நேரம் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 

வருகின்ற 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவ விழா 26 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த பிரம்மோற்சவம் விழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் ஏழுமலையான் சமேதராக 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 

மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பூக்கள், பழங்கள் போன்றவற்றினால் கோவில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 66 ஆயிரத்து 199 பேர் தரிசனம் செய்தனர். அதில் 29 ஆயிரத்து 351 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ. 4.17 கோடி வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Eyumalayan temple cleaning work Sami darshan canceled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->