டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? - வெளியாகப்போகும் அதிரடி அறிவிப்பு.!
today bjp meeting for select delhi chief minister
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலின் முடிவுகள் வெளியாகி சுமார் பத்து நாட்களை கடந்துவிட்டது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி இருந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இதில் டெல்லியின் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. அந்த வகையில் இன்று மாலைக்குள் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விடும் என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நாளை மாலை டெல்லி முதலமைச்சரின் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
today bjp meeting for select delhi chief minister