ஒடிசாவில் இன்றைய நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் - முதல்வர் நவீன் பட்னாயக்.! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 10 பெட்டிகள் சரிந்து அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ரயில் பெட்டிகள் கவிழ்ந்திருந்த தண்டவாளத்தில் அதிவிரைவு ரயிலான எஸ்வந்த்பூர் ஹவுரா ரயில் கவிழ்ந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு சரிந்தன. இந்த இரண்டு பயணிகள் ரயிலுடன் மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கொடூர ரூபத்தில் இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2004க்கு பிறகு உலக அளவில் மிக மோசமான ரெயில் விபத்தாக ஒடிசா பாலசோர் ரெயில் விபத்து பதிவாகியுள்ளது. தற்போது வரை 207 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 2004 சுனாமியின் போது இலங்கையில் 1700 பேர் உயிரிழந்த மாதாரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து தான் மிக கோரமான ரெயில் விபத்தாக உள்ளது.

இந்த நிலையில், ரயில் விபத்து எதிரொலியாக ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும், ரயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today will be observed as mourning day in Odisha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->