பரபரப்புக்கு மத்தியில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்..!
tomarrow union ministers meeting
கடந்த மாதம் 25-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய நாளில் இருந்து, அதானி லஞ்ச விவகாரத்தை எழுப்பி, தினமும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அதாவது, தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் அரசின் சில முக்கியத் திட்டங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
tomarrow union ministers meeting