மீனவப்படகில் திடீரென தீப்பற்றிய விபரீதம்... அச்சத்தில் கூச்சலிட்ட மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல் படை! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்திலுள்ள அலிபாக் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தனியார் மீனவப் படகு, நடுக்கடலில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இச்சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணித்த 18 மீனவர்களும் தீ விபத்தைக் கண்டதும் திடுக்கிட்டுத் தவித்தனர்.

அச்சத்தில் கூச்சலிடும் அவர்களை காப்பாற்றும் முனைப்புடன், அருகில் ரோந்துப் பணியில் இருந்த இந்திய கடலோர காவல் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.  

தீ பரவியபோது, இருண்ட சூழலிலும் துரிதமான மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் படகில் இருந்த அனைவரும் பத்திரமாக மற்றொரு படகுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில், தீ கட்டுப்படுத்தப்பட்டு, பரவல் தடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.  

தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மீட்கப்பட்ட 18 மீனவர்களும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy of a sudden fire on a fishing boat


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->