டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து: அரிட்டாப்பட்டி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...மத்திய அரசுக்கு நன்றி!  - Seithipunal
Seithipunal


டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய அரசு திட்டத்தை கைவிட்டுள்ளதாக அரிட்டாப்பட்டி கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதில் முக்கியமான பகுதியான அரிட்டாப்பட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இந்த டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைய இருந்தது.இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு அதற்கு அரிட்டாப்பட்டி உள்ளிட்ட மேலூர் பகுதியிலுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும்,சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

எங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய அரசு திட்டத்தை கைவிட்டுள்ளது என்று திட்டம் ரத்துசெய்யப்பட்டது குறித்து அரிட்டாப்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உள்ளோம் என்றும் அரிட்டாப்பட்டி மக்களுக்கு இது ஒரு மறக்க முடியாத வெற்றி என்றும்  நாங்கள் எங்களது வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ வழி செய்துள்ளனர் என கூறினர். மேலும் இதற்காக மத்திய அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள கிராம மக்கள் அரிட்டாப்பட்டி மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த மற்ற கிராம மக்களுக்கும் நன்றி.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tungsten mining project cancelled: Residents of Arittapatti celebrate by bursting crackers Thank you to the central government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->