லடாக்கில் இரண்டு புதிய மாவட்டங்கள்; சீனா அறிவிப்பு; இந்தியா கடும் எதிர்ப்பு..! - Seithipunal
Seithipunal


லடாக்கில் ஆக்கிரமித்த பகுதிகளில் புதிதாக 02 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது. இதற்கு, இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் வடமேற்கில் அக்சாய் சின் (Aksai Chin) நிலப்பகுதி அமைந்துள்ளது. இந்திய அரசால் உரிமை கோரப்படும் அக்சாய் சின் பகுதி, தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் நீண்ட காலமாக இரு நாடுகளுக்குமிடையில் சர்ச்சை நீடித்து வருகிறது. 

இந்த பகுதி 1947 பிரிவினையின் போது இந்தியாவுடன் இணைந்தது. ஆனால் இதனை சீன அரசு தங்களுக்கு சொந்தமான பகுதியாகவே கருதுகிறது. குறித்த, எல்லை விவகாரத்தால் 1962-ஆம் ஆண்டு இந்தோ-சீனா போர் மூண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போரில் சீனா வெற்றி பெற்ற பின்னர் இப்பகுதி முழுவதும் சீன அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.பின்னர் அக்சாய் சின் வழியாக சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் சாலையை சீன அரசு அமைத்தது.

இந்த ஆக்கிரமிப்பு பகுதியின் அருகில் சீனாவின் ஹோடன் மாகாணம் அமைந்துள்ளது.  இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவின் ஆக்கிரமிப்பு எல்லைக்குள் வருகின்றன. அந்த பகுதிகளுக்கும் சீனா தற்போது உரிமை கொண்டாடி வருகிறது.

சீனாவின் ஆக்கிரமிப்பை இந்திய அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. லடாக்கில் ஆக்கிரமித்த பகுதிகளில் புதிதாக 02 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான அறிவிப்பு 
தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"இந்திய பகுதியை சட்ட விரோதமாக சீனா ஆக்கிரமித்ததை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை" என்று தெரிவித்தார்.

மேலும், "சீனா அறிவித்துள்ள 02 புதிய மாவட்டங்கள் இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் வருகின்றன. புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம் குறிப்பிட்ட பகுதியின் மீதான இந்தியாவின் இறையாண்மை தொடர்பான நீண்டகால நிலைப்பாட்டை மாற்ற முடியாது.

இந்த செயல் சீனாவின் சட்டவிரோத மற்றும் வலுக்கட்டாய ஆக்கிரமிப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காது. நாங்கள் தூதரக வழிகள் மூலம் சீன தரப்பிற்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளோம்" என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two new districts in Ladakh Chinese announcement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->