போலீசாரை விரட்டி விரட்டி கத்தியால் குத்திய கும்பல் - ரெயில் நிலையத்தில் பரபரப்பு.!
two peoples arrested for attack police officer in karnataga railway station
கர்நாடகா மாநிலத்தில் உள்ள, மாண்டியா ரயில்வே அவுட் போஸ்ட் காவலராக பணிபுரிந்து வரும் சதீஷ் சந்திரா, மைசூரில் இருந்து பெங்களூருக்கு கோல் கும்பாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ரயிலில் அமர்ந்திருந்த ஆறு பேர் கொண்ட கும்பல், கஞ்சா கலந்த சிகரெட்டை புகைத்துள்ளனர். இதை ரயில்வே போலீஸ்காரரான சதீஷ் சந்திரா கண்டித்துள்ளார். அதனால், அவருக்கும், கஞ்சா புகைத்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் மத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றது.
இதையடுத்து, ரயிலில் இருந்து சதீஷ் சந்திரா இறங்கியுள்ளார். உடனே வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்தக் கும்பலும் கீழே இறங்கியது. பின்னர் சதீஷ் சந்திராவை அந்தக் கும்பல் விரட்டி விரட்டி கத்தியால் குத்தியது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சதீஷ் சந்திராவை அங்கிருந்த பயணிகள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்களை மைசூர் ரயில்வே போலீஸார் கைது செய்ததுடன், மீதமுள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் அதிகாரி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples arrested for attack police officer in karnataga railway station